கனிமொழி, சிவா, ராஜா வேட்பு மனு தாக்கல்
சென்னை:ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராஜா ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.
![]() |
இதில் திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், ஆ.இளவரசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று இதுவரை தெரியவில்லை.
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
முன்னதாக கனிமொழியும், சிவாவும் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகனை அறிவாலயத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்று அங்கு தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவைச் சந்தித்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, ஏ.வ. வேலு, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ராஜா வேட்பு மனு தாக்கல் செய்தபோதும் இவர்கள் உடனிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications