மாநகராட்சிகளில் கட்டாய ஹெல்மட் அமலுக்கு வந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் ஆறு மாநகரங்களிலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது.

சென்னை உள்ளிட்ட ஆறு மாநகராட்சி பகுதிகளிலும் இன்று முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஓட்டுவோர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மட் அணிய வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

ஆண், பெண், குழந்தைகள் என பாரபட்சம் இல்லாமல், அனைவருமே ஹெல்மட் போட்டிருக்க வேண்டும் எனவும் அரசு கண்டிப்பாக தெரிவித்திருந்தது. இதனால் ஆறு நகரங்களிலும் ஹெல்மட் விற்பனை கடந்த சில நாட்களாக சூடு பிடித்திருந்தது. நேற்று நள்ளிரவைத் தாண்டியும் ஹெல்மட் விற்பனை படு விறுவிறுப்பாக இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் அரசின் உத்தரவு அமலுக்கு வந்தது. இன்று சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களிலும் இரு சக்கர வாகனங்களில் சென்றோர் ஹெல்மட் அணிந்தபடி சென்றதைக் காண முடிந்தது.

பெரும்பாலானவர்கள் ஹெல்மட்டோடு சென்றனர். பின்னால் அமர்ந்து சென்றவர்கள், பெண்கள், குழந்தைகள் என சகலரும் ஹெல்மட்டோடு சென்றதால் ஒரே ஹெல்மட் மயமாகக் காணப்பட்டது.

போக்குவரத்து சிக்னல்களில், ஹெல்மட்களோடு வண்டிகளில் அமர்ந்திருந்தவர்கள் ஒருவர் தலையை மற்றவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். அதிலும் வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஹெல்மட் அணிந்தவர்கள் முகத்தில் புதுப் பெண்ணின் நாணத்தையும் காண முடிந்துது.

அரசின் கண்டிப்பான உத்தரவையும் மீறி பலர் ஹெல்மட் அணியாமல் சாலையில் வண்டிகளை விரட்டியபடி சென்றனர். அவர்களை போலீஸார் ஆங்காங்கு நின்று கப் கப் என்று பிடித்து அபராதத்தைத் தீட்டினர்.

முதல் நாளே சென்னை நகரில் நூற்றுக்கணக்கான பேர் ஹெல்மட் அணியாததற்காக அபராதம் கட்டியதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் ஹெல்மட்மயமாக சாலைகள் காணப்பட்டன. ஹெல்மட் அணியாமல் சென்றவர்கள் அபராதம் கட்டிவிட்டு திரும்பினர் (மறுபடியும் மாட்டினால் மீண்டும் அபராதம் கட்ட வேண்டும்)

ஜூலை 1ம் தேதி முதல் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

ஹெல்மட் அணியாமல் போனதற்காக சென்னையில் 2000 பேரும், மதுரையில் 450, கோவையில் 400, சேலத்தில் 400, நெல்லையில் 250 பேர் பிடிபட்டு அபராதம் கட்டியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+