மதுரை இடைத் தேர்தல்-இன்று முதல் வேட்பு மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது.

அதிமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவிய எம்எல்ஏ எஸ்வி சண்முகம் மரணமடைந்தைத் தொடர்ந்து இடைத் தேர்தல் வரும் ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

ஆனால், இதுவரை எந்த அரசியல் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

மனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 8ம் தேதி வரை நடைபெறும். 9ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 11ம் தேதி ஆகும்.

ஜூன் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 29ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவும் அறிவிக்கப்படும்.

தேர்தல் பணியில் மத்திய அரசு பணியாளர்கள் ஈடுபடத்தப்படுவர் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. தேர்தலுக்கான மத்திய தேர்தல் பார்வையாளர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+