பாலாறு: மின்சாரத்தை துண்டித்து தமிழக எல்லை கிராமங்களுக்கு ஆந்திரம் டார்ச்சர்
வாணியம்பாடி:பாலாறு குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் , தமிழக எல்லை பகுதியில் மின்சாரம் துண்டித்துள்ளது ஆந்திர அரசு. இதன் மூலம் அப் பகுதியில் வசிக்கும் தமிழக மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் பாமக உள்ளபட அனைத்து அரசியில் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழக அரசும் ஆந்திர அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் எல்லையில் வசிக்கும் தமிழக மக்களுக்கு மின்சாரத்தை துண்டித்து பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது ஆந்திரம்.
வேலூர் மாவட்டம் ஆந்திர-தமிழக எல்லையில் தகரங்குப்பம் கிராமம் உள்ளது. இங்குள்ள 93 வீடுகளுக்கும், 83 பம்ப்செட்டுகளுக்கும் ஆந்திர அரசு மின் இணைப்பு கொடுத்துள்ளது.
பாலாறு அணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தமிழக பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தியுள்ளது ஆந்திரம்.
முதல் காட்டமாக தகரங்குப்பத்தில் விவசாய பம்ப் செட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்புகளை ஆந்திர ஆதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
மேலும் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தையும் ஆந்திர அரசு துண்டித்து விட்டனர்.
இதனால் கடந்த 2 மாதங்களாக தகரங்குப்பம் கிராமத்தினர் இருளில் மூழ்கியுள்ளனர். இதை எதிர்த்து இக்கிராமத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் நேற்று மாலை ஆந்திர மாநில மின்சாரத்துறை அதிகாரிகள் 10 பேர் தகரங்குப்பம் கிராமத்துக்கு வந்து அங்கு நிறுவப்பட்டுள்ள 3 மின்சார டிரான்ஸ்பார்மர்களை அகற்றி எடுத்துச் செல்ல முயன்றனர்.
இதை அறிந்த கிராமத்தினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
மேலும் டிரான்ஸ்பார்மர்களை அகற்ற விடமாலும், அதிகாரிகளை அங்கிருந்து போக விடாமலும் சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக பகுதியில் இருந்து போலீஸார், தாசில்தார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று கிராமத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆந்திர அதிகாரிகளை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இன்று ஆந்திர அதிகாரிகள் மீண்டும் ஆந்திர போலீஸ் பாதுகாப்புடன் வந்து டிரான்ஸ்பார்மர்களை எடுத்த செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தகரங்குப்பத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறறு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications