ஜனாதிபதி தேர்தல்-ஷெகாவத் சுயேச்சையாக போட்டி
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் துணை குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரோன் சிங் ஷெகாவத்தை பாஜக சார்பில் பொது வேட்பாளராக நிறுத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்து, அவருக்காக பல்வேறு கட்சிகளில் ஆதரவை திரட்டி வருகிறார். இதுகுறித்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடமும் வாஜ்பாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் ஷெகவாத்தை ஆதரவு அளிக்க முன்வரவில்லை. கம்யூனிஸ்டு கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
பாஜகவுக்கு மதவாத முத்திரை இருப்பதால் அதை காரணம் காட்டி பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே ஷெகாவத்தை சுயேச்சையாக போட்டியிட வைக்க வாஜ்பாய் முடிவு செய்துள்ளார். இதற்கு ஷெகாவத்தும் ஒத்துக் கொண்டார்.
ஷெகாவத் சுயேச்சை வேட்பாளராக நின்றால் பாஜக கூட்டணி கட்சிகள் தவிர பிற காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளும் அவருக்கு ஓட்டளிக்கும் என பாஜக கருதுகிறது.
மேலும் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஷெகாவத்துக்கு நெருக்கிய நண்பர் என்பதால் அவர் மூலம் சில எம்பிக்களின் ஆதரவு திரட்டும் முயற்சிகளும் நடக்கின்றன.
அதே போல தேவே கெளடா, சந்திரபாபு நாயுடு, அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய தலைவர்கள், கட்சிகளின் ஆதரவையும் பெற பாஜக முயன்று வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications