தமிழக கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம்
கன்னியாகுமரி:தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி வந்த பெரியகருப்பன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரியது, சிறியது, வருவாய் தரக் கூடியது என்று மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்.
தற்போது இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் 360 கோவில்களில் அன்னதானத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 180 கோவில்களில் இதைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை அளிப்பதற்காக கோவில் சுற்றுலாவை மேம்படுத்த இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான திட்டம் பரிசீலனையில் உள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் வேத பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சேர மொத்தம் 1300 பேர் விண்ணப்பித்தார்கள். அதில் 240 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இலவச தங்குமிடம், ஆடை, உணவு ஆகியவை வழங்கப்பட்டு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
260 கோவில் தேர்களைப் பராமரித்து புதுப்பிக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 600 தேர்கள் நல்ல நிலையில் உள்ளன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ரூ. 1 கோடியில் புதிய தங்கத் தேர் செய்யப்படும் என்றார் பெரியகருப்பன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications