கன்னியாகுமரி-குளத்தில் திருட்டுத்தனமாக மீன்பிடித்ததில் மோதல்-2 பேர் வெட்டிக் கொலை
கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் குளத்தில் திருட்டுத்தனமாக மீன் பிடித்தில் மோதல் ஏற்பட்டதில் 2 வாலிபர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி அருகே வெள்ளையந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன் (36). இவர் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள நாடன் குளத்தை குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து வந்தார்.
இதில் சரவணன்தேரியை சேர்ந்த ஜெகன், நாடன்குளத்தை சேர்ந்த தங்கராஜ் ஆகியோர் திருட்டுத்தனமாக மீன் பிடித்து வந்தனர். இது தொடர்பாக கண்ணனுக்கும், ஜெகன், தங்கராஜ் ஆகியோருக்கு இடையே தகராறு இருந்து வந்தது.
இந் நிலையில் கடந்த மாசம் 6ம் தேதி கண்ணன் அவரது கூட்டாளிகள் செல்வம், பாஸ்கர் ஆகியோர் சேர்ந்து ஜெகனையும், தங்கராஜையும் வெட்டினர். இதில் படுகாயமடைந்த ஜெகன், தங்கராஜ் இருவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இது தொடர்பாக கண்ணன் உள்பட 3 பேரும் மீது போலீஸார் வழங்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந் நிலையில் அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் பெற்றனர். அதன்படி 3 பேரும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தனர்.
இந் நிலையில் நேற்று வழக்கம் போல கையொழுத்து போட கண்ணனும், செல்வமும் ஒரு மோட்டார் சைக்கிளில் கோவளம் அருகில் உள்ள தலக்குளம் வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு டெம்போவில் வந்த ஒரு கும்பல் கண்ணனையும், செல்வத்தையும் தடுத்து நிறுத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இருவரையும் அந்த குளத்தில் அந்த கும்பல் தூக்கி வீசி விட்டு சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications