கிருஷ்ணசாமிக்காக கூடிய ஐந்தே ஆதரவாளர்கள்!
கடலூர்:ராஜ்யசபா தேர்தலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு டிக்கெட் தரப்படாததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வெறும் ஐந்து பேர் கடலூரில் வீரப்ப மொய்லியின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜ்யசபா தேர்தலில் டிக்கெட் வாங்கி விட தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக முயன்றார். இதற்காக டெல்லி சென்று அங்கேயே முகாமிட்டு முயற்சி செய்து வந்தார்.
ஆனால் அதையும் மீறி ஜி.கே.வாசன் ஆதரவாளரான பி.எஸ்.ஞானதேசிகனுக்கே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால் கிருஷ்ணசாமி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக டெல்லி தலைவர்களிடம் கூறி வருகிறாராம்.
இந் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியின் மீது கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் கோபம் திரும்பியுள்ளது. அவர் தான் வாசனுக்கு ஆதரவாக செயல்பட்டு கிருஷ்ணசாமியின் வாய்ப்பை கெடுத்ததாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து இன்று கடலூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சீமாட்டி கார்னர் என்ற இடத்தில் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் கூடினர். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்திரகோதண்டபாணி தலைமையில் கூடிய அந்தக் கூட்டத்தில் மொத்தமே 5 பேர் தான் இருந்தனர்.
அவர்கள் வீரப்ப மொய்லியின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். உடனடியாக போலீஸார் ஓடிவந்து அவர்களைக் கைது செய்து கொடும்பாவியை மீட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications