இடி தாக்கி 2 விவசாயிகள் பலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டத்தில் இடி தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு விவசாயிகள் இறந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று நல்ல மழை பெய்தது. தொக்கலிக்கல் என்ற கிராமத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் மாட்டு வண்டியில் வந்து கொண்டிருந்த விவசாயி மாணிக்கவாச குரு (34) பரிதாபமாக இடி தாக்கி இறந்தார். அவரது இரண்டு எருமை மாடுகளும் சம்பவ இடத்திலேயே கருகி இறந்தன.
சிலத்தூர் கிராமத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு விவசாயியும் இடி தாக்கி பரிதாபமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications