திருமங்கலம் அருகே பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
திருமங்கலம்:திருமங்கலம் அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 40 பயணிகள் படுகாயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து ஒரு பேருந்து வாகைக்குளத்திற்கு வந்துக் கொண்டிருந்தது. இதில் 120க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஓட்டுனர் பேருந்தை மிக வேகமாக ஓட்டி வந்துக் கொண்டிருந்தார். பள்ளிக்காபட்டி என்ற இடத்தில் வளைவில் திரும்ப முயலும்போது பேருந்து தலைகீழாக கவிழ்ந்து, 2 முறை உருண்டு பள்ளத்தில் விழுந்தது.
இதில் பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications