சென்னை: தரையிறங்கிய சரக்கு விமானத்தில் தீ-கீழே குதித்து உயிர் தப்பிய விமானிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் தரையிறங்கிய சரக்கு விமானத்தில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து விமானிகள் கீழே குதித்து ஓடி உயிர் தப்பினர்.

பர்ஸ்ட் பிளைட் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த சிறிய சரக்கு விமானம் டெல்லியில் இருந்து சென்னை வந்தது.

பறக்கும்போதே விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. அதன் முன் சக்கர டயர்களின் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் பிரச்சனை உருவானது.

இதனால் அந்த முன் சக்கரங்கள் சுழலாமல் லாக் ஆகிவிட்டன. இந்த பிரச்சனையோடு விமானம் தரையிறங்கியபோது அதன் முன் பக்கத்தில் தீப் பற்றிக் கொண்டது.

இதையடுத்து பாதி ரன் வேயிலேயே விமானத்தை நிறுத்திவிட்டு விமானிகள் இருவரும் கீழே குதித்து உயிர் தப்பினர். பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர்.

தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தன.

ரன் வேயில் இச் சம்பவம் நடந்ததால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானத்தை ரன்வேயை விட்டு அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று இலங்கையில் இருந்து பெங்களூர் வந்த சரக்கு விமானமும் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. தரையிறங்கும்போது ரன்வேயை விட்டு விலகி ஓடிய அந்த விமானம் தரையில் பாயந்தது. இதனால் நேற்று இரவு பெங்களூர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+