தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள்குண்டுவீச்சு; ஒருவர் காயம்-படகு சேதம்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். ஒரு விசைப் படகு சேதமடைந்தது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நிலவி வந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து சமீப காலமாக இந்த தாக்குதல் குறைந்துள்ளது.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 784 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் படகுகள் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் இருதயராஜ் என்பவருக்குச் சொந்தமான படகு மீது ஐந்து குண்டுகள் வந்து விழுந்து வெடித்தது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்தது.
அந்தப் படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து நீந்தி அருகில் இருந்த படகில் ஏறி உயிர் தப்பினர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications