லாரி-வேன் மோதலில் 7 விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் பலி
விருதுநகர்:விருதுநகர் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நெல்லையில் நேற்று மண்ணுரிமை மாநாடு நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடந்த இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேன்கள் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்தனர். மாநாடு முடிந்து அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
அவர்களில் அலங்காநல்லூர் அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலரும் அடங்குவர். மாநாட்டுக்கு டாடா சுமோ காரில் வந்திருந்த அவர்கள் மாநாட்டை முடித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பினர்.
இன்று அதிகாலையில், விருதுநகர் அருகே பட்டம்புதூர் என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த மணல் லாரி, சுமோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தால் விருதுநகர்-மதுரை சாலையில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications