மது குடிக்க வழியில்லாமல் தற்கொலைசெய்து கொண்டவருக்கு குவார்ட்டர் அஞ்சலி!!!
கரூர்:கரூர் மாவட்டம் ராயனூர் என்ற கிராமத்தில், குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டவருக்கு அவரது நண்பர்களும்,உறவினர்களும் குவார்ட்டர் பாட்டில் மது வாங்கி வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ராயனூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி சந்திரகாந்தி. நேற்று மாலை குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் சுப்ரமணியம். ஆனால் சந்திரகாந்தி பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குடிக்கப் பணம் தர மறுத்து விட்டாளே மனைவி என்று வருத்தமடைந்த சுப்ரமணியம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் பரவியதும் சுப்ரமணியத்தின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில், சுப்ரமணியம் வீட்டுக்கு வந்தனர். சுப்ரமணியத்திற்கு மிகவும் விருப்பமான மது பாட்டில்களை (எல்லாம் குவார்ட்டர் பாட்டில்கள்) வாங்கிக் கொண்டு வந்து சுப்ரமணியத்திறகு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
உடலை சிதையில் வைத்தபோது குவார்ட்டர் பாட்டிலகளை உடைத்து மதுவை உடல் மீது ஊற்றி தண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சி படு விநோதமாக இருந்தது.
ஒரு குவார்ட்டர் பாட்டில் கிடைக்காத காரணத்தால்தான் சுப்ரமணியம், தற்கொலையே செய்து கொண்டார். ஆனால் அவர் இறந்த பின்னர் நூற்றுக்கணக்கான குவார்ட்டர் பாட்டில்களைக் கொண்டு வந்து அவரது நிறைவேறாத ஆசையை நிறைவேற்றி வைத்து விட்டனர் உறவினர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications