மதுரை இடைத் தேர்தல்-ஆயுதங்களுடன் துணை ராணுவம் ரோந்து
மதுரை:மதுரை மேற்கு தொகுதி தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் மத்திய துணை ராணுவத்தினர் ஆயுதங்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத் தொகுதியில் வரும் 26ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. ஒரு பக்கம் அழகிரியின் அஞ்சா நெஞ்சன் படையினர், இன்னொரு பக்கம் அதிமுகவின் தென் மாவட்ட பெருந்தலைகள் என மதுரையே கதி கலங்கிக் கிடக்கிறது.
தேர்தலை அமைதியாக நடத்த மத்திய துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் அவர்கள் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள 21 வார்டுகளில் 24 மணி நேரமும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்து 2,000 போலீஸாரும், தமிழக சிறப்பு அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து 80 மோட்டர் சைக்கிள்களும், 100 வாக்கி டாக்கிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
இத்தொகுதியிலுள்ள பழைய குற்றவாளிகள், ரெளடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 ரெளடிகள் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் கலவரத்தில் ஈடுபடும் சமூக விரோத கும்பல் மீது கண்டதும் சுட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications