அப்துல் கலாமை சந்திக்கிறார் பிரதமர்:வேட்பாளர் மாற்றமில்லை
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமை போட்டியிட வைக்க மூன்றாவது அணி முயற்சி செய்து வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று கலாமை சந்திக்க நேரம் கோரியுள்ளார்.
கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் தான் தானும் போட்டியிட விரும்பவில்லை என கலாம் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலின் வேட்பு மனுவை முன்மொழிந்து மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று காலை கையெழுத்தும் போட்டுவிட்டனர்.
இதற்கிடையே கலாமை போட்டியிட வைக்க ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதே போல போட்டியிட கலாம் ஒப்புக் கொண்டால் அவரை ஆதரிக்கத் தயார் என பாஜகவும் அறிவித்துள்ளது. கலாமுக்காக போட்டியிலிருந்து விலகவும் தயார் என பாஜக சார்பில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான பைரோன் சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
இதனால் கலாம் விஷயத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தேசிய அளவில் தனக்கு அவப்பெயர் வரலாம் என காங்கிரஸ் கருதுகிறது.
இந் நிலையில் அப்துல் கலாமை சந்திக்க இன்று திடீரென அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
எதற்காக இந்தச் சந்திப்பு என்று கூறப்படவில்லை. ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலாமுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை நடத்தலாம் எனத் தெரிகிறது.
தங்களது வேட்பாளர் பிரதீபா பாட்டீல் தான் என்பதை கலாமிடம் அவர் பிரதமர் விளக்குவார் என்று தெரிகிறது.
இந் நிலையில் அப்துல் கலாமுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்தாலும் கலாமை ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications