பர்தா சர்ச்சையில் பிரதீபா பாட்டீல்-முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு
டெல்லி: பெண்கள் பர்தா அணிவது தேவையற்றது, இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநில ஆளுனராக உள்ள பிரதீபா பாட்டீல் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் ராஜஸ்தான் உதய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சியி்ல கலந்து கொண்டு பேசியபோது,
![]() |
பெண்கள் பர்தா அணிவது தேவையற்றது. பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணியும் வழக்கம் மொகலாயர் ஆட்சி காலத்தில் ஏற்பட்டது.
மொகலாயர்கள் படையெடுத்து வந்து போது அவர்களிடமிருந்து பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர். பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கூறினார்.
இவர் இவ்வாறு பேசியிருப்பதற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முஸ்லீம்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல சரித்திர நிபுணர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரதீபாவுக்கு தமுமுக கண்டனம்:
இந்நிலையில் பிரதீபா பாட்டீல் கூறிய கருத்துக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பர்தா அணிவதும், முக்காடு அணிவதும் பெண் குலத்திற்கு எதிரானது என்று பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார். இதை எந்த அடிப்படையில் அவர் கூறியுள்ளார் என்பது தெரியவில்லை.
மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும், ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் அவர் உயர்ந்துள்ளார். தனது சேலை முந்தானையால் முக்காடு போட்டுக் கொண்டுதான் இந்தப் பதவிகளுக்கு அவர் உயர்ந்தார் என்பதை மறந்து விடக் கூடாது.
பர்தா என்ற கவச உடை, முஸ்லீம் பெண்களின் உரிமையும், கடமையும் ஆகும். அதை விமர்சிப்பதும், குறுகிய நோக்கில் சாடுவதும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின்படி ஆளுநராகப் பதவியேற்றுள்ள ஒருவருக்கு உகந்ததல்ல.
பிரதீபா பாட்டீலின் கருத்து முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்தியப் பெண் குலத்துக்கே மாசு கற்பிக்கும் செயலாகும்.
முகலாயர் காலத்தில்தான் பர்தா அணியும் முறை நடைமுறைக்கு வந்ததாக பிரதீபா பாட்டீல் கூறுவது தவறானதாகும். இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தே, இஸ்லாம் இந்தியாவுக்கு வருகை புரிவதற்கு முன்பிருந்தே பர்தா முறை இந்தியாவில் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications