கலாமுக்கு ஆதரவு பெருகுகிறது.. ஆனால் ஏற்பாரா?
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அப்துல் கலாமுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. ஆனாலும் அவர் போட்டியிடுவாரா என்று தெரியவில்லை.
ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி அவரையே மீண்டும் போட்டியிடுமாறு கோரியுள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகையை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டனர்.
அப்போது, மூன்றாவது அணியில் தலைவர்கள் நாளை (20ம் தேதி) அப்துல் கலாமை சந்தித்துப் பேச உள்ளனர். அதன் பின்னரே எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியும் என்று பதில் கிடைத்துள்ளது.
இதன்மூலம் மீண்டும் போட்டியிட கலாம் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவை அவர் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மூன்றாவது அணியில் ஆதரவு இல்லாத நிலையில் தனது தோல்வி நிச்சயமாகிவிட்டதால் போட்டியில் இருந்து விலக பாஜக சார்பிலான சுயேச்சை வேட்பாளரான பைரோன்சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தலைவரும் மாஜி பிரதமருமான வாஜ்பாயை அவர் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். அப்போது போட்டியில் இருந்து விலக வேண்டாம் என ஷெகாவத்தை வாஜ்பாய் கேட்டுக் கொண்டார். ஆனால், விலகிவிடுவதில் ஷெகாவத் தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது.
இச் சந்திப்புக்குப் பின் ஷெகாவத் வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதியாக அப்துல் கலாமே தொடர்வதாக இருந்தால் அதை விட மகிழ்ச்சியான விஷயம் ஏதும் இல்லை. அவரை ஒருமனதாக தேர்வு செய்ய அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தால் நான் போட்டியில் இருந்து விலகத் தயார் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடியரசு தலைவராக மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நானும் அவரும் 5 வருடங்களாக இணைந்து பணியாற்றியுள்ளோம்.
இதுவரை ஒரு முறை கூட எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது கிடையாது. அதனால் அனைத்து கட்சிகளும் சேர்ந்து அவரை குடியரசு தலைவராக்க விரும்பினால் நான் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஜெ. நாளை டெல்லி பயணம்:
இந் நிலையில் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் தலைமையிலான மூன்றாவது அணியின் தலைவர்கள் நாளை ஜனாதிபதி கலாமை சந்தித்து மீண்டும் போட்டியிடுமாறு வலியுறுத்தவுள்ளனர்.
இதற்காக ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார்.
இந்த மூன்றாவது அணித் தலைவர்கள் சந்திக்க நாளை பிற்பகல் 3.30க்கு நேரம் ஒதுக்கியுள்ளார் ஜனாதிபதி கலாம்
தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தாலும், ஒருமித்த கருத்து இல்லை என்றால் கலாம் மீண்டும் போட்டியிடுவது சந்தேகமே.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications