கள்ளக்காதலிக்கு செலவழிக்க வேலை பார்த்தநிறுவனத்தில் திருடிய வாலிபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலை பார்த்து வந்த திரைப்பட நிதி நிறுவனத்தில் ரூ.13.32 லட்சம் பணத்தைத் திருடி கள்ளக்காதலியைக் குஷிப்படுத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் சென்னை திநகரில் பிரசாத் சினிமா பைனான்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆந்திராவில் தங்கியுள்ள பிரசாத், தனது சென்னை நிறுவனத்தைப் பார்த்துக் ெகாள்வதற்காக பட்டாபி ராமாராவ் (40) என்பவரை மேலாளராக வைத்திருந்தார். இவர் தவிர கார்த்திக் என்பவரும் இங்கு வேலை பார்த்து வந்தார்.

சினிமா நிறுவனங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்தது பிரசாத்தின் நிறுவனம். பொதுவாக டிடி மற்றும் காசோலைகளாகத்தான் கடன் கொடுப்பது வழக்கம். சில சமயங்களில் பணமாகவும் கொடுப்பார்கள்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி தயாரிப்பாளர் ஒருவர் தான் வாங்கியிருந்த ரூ.13.32 லட்சம் பணத்தை ரொக்கமாக திருப்பிக் கொடுத்தார். அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது 2 கட்டுகள் குறைவாக இருப்பது போல் தெரிந்ததால், கார்த்திக்கிடம் கொடுத்து எண்ண சொன்னார். பணம் சரியாக இருந்ததால் அங்குள்ள பீரோவில் வைத்தார் கார்த்திக்.

நேற்று அலுவலகத்தை திறந்து பார்த்தபோது பீரோ திறந்திருந்தது. அதில் வைத்திருந்த ரூ.30.32 லட்சம் பணத்தைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பட்டாபி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். திருட்டு நடந்த அலுவலகத்தை பார்வையிட்ட போலீஸார், அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்படாமல் இருந்ததால் கள்ளசாவி போட்டு திறந்திருக்கலாம் அல்லது ஊழியர்களே இந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர்.

இதையடுத்து நிறுவன ஊழியர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, பீரோவில் பதிந்துள்ள கைரேகையோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

அப்போது கார்த்திக்கின் கைரேகை ஒத்துபோனதால் அவரிடம் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்தவர், பின்னர் தான்தான் பணத்தைத் திருடியதாக ஒத்துக் கொண்டார்.

போலீஸாரிடம் கார்த்திக் கொடுத்த வாக்குமூலம்

கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 4 சகோதரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலையில்லை. என்னுடைய சம்பளத்தில்தான் குடும்பம் நடக்கிறது. போதிய வருவாய் இல்லாததால், குடும்பத்தை நடத் சிரமப்படுகிறேன்.

இந்த நிலையில், எனக்கும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த உஷா என்பவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. உஷாவின் கணவர் வேலைக்காக வெளியூர் சென்றால் பல நாட்கள் கழித்துத்தான் வீட்டுக்கு வருவார்.

இதனால் நானும், உஷாவும் நெருங்கிப் பழகினோம். உஷாவுக்கு என் மீது நிறைய பாசம் உண்டு. அதேபோல நானும் உஷாவிடம் அன்பாக பழகினேன். அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக நிறைய கடன் வாங்கினேன்.

எவ்வளவு கடன் வாங்கியும் செலவுக்குப் பணம் போதவில்லை. இந்த நிலையில்தான் எனது அலுவலகத்தில் நிறைய பணம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தை கொள்ளையடித்தால் சந்தோஷமாக இருக்கலாம் என நினைத்து கள்ளசாவி போட்டு பீரோவை திறந்து பணத்தை எடுத்தேன். அந்த பணத்தை உஷா வீட்டில் வைத்துள்ளேன் என்று கார்த்திக் கூறினார்.

இதையடுத்து உஷா வீட்டுக்கு விரைந்த போலீஸார் அங்கு கார்த்திக் பதுக்கி வைத்திருந்த ரூ.13.32 லட்சம் பணத்தையும் கைப்பற்றினர். அந்த சமயத்தில் உஷா தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்ததால் சாவியை கார்த்திக்கிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இக்கொள்ளையில் உஷாவுக்கு சம்பந்தம் உள்ளதா என்பதை அறிய அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+