தமிழக பஞ்சாயத்து தலைவருக்கு துபாயில் பாராட்டு
துபாய்:தமிழகத்தின் பொதக்குடி ஊராட்சித் தலைவர் எஸ்.எஸ்.காஜா நஜிபுதீனுக்கு துபாயில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதக்குடி ஊராட்சி. இங்கு அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தியும், ஊராட்சியை 100 சதவீதம் தூய்மையானதாகவும் மாற்றியதற்காக மத்திய அரசின் புரஸ்கார் விருது பொதக்குடி பஞ்சாயத்துத் தலைவர் காஜா நஜிபுதீனுக்கு கிடைத்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் இந்த விருதினை காஜா நஜிபுதீன் பெற்றார். இதையொட்டி அவருக்கு துபாயில், கடந்த 14ம் தேதி கராமா சிவ் ஸ்டாரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அஜ்மான் அமீரகத் தமிழர் அமைப்பின் மூர்த்தி தலைமை தாங்கினார். தேரிழந்தூர் இம்தியாஸ் வரவேற்பு நிகழ்த்தினார். அமுதரசன் முன்னிலை வகித்தார்.
காஜா நஜிபுதீனை வாழ்த்தி வானலை வளர் தமிழ் அமைப்பின் காேவரி மைந்தன், தாய் மண் வாசகர் வட்டத்தின் செ.ரே. பட்டணம் மணி, பொதக்குடி ஜமாத்தைச் சேர்ந்த நைனா முகம்மது, குத்தாலம் அஷ்ரப் அலி, சிவ் ஸ்டார் பவன் உரிமையாளர் கோவிந்தராஜன், பரத், ஆசிப் மீரான் உள்ளிட்டோர் பேசினர்.
மதுக்கூர் அன்வர்தீன் நினைவுப் பரிசு வழங்கினார். காஜா நஜிபுதீன் ஏற்புரை நிகழ்த்தினார். அமீரகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஸையுதீன் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications