கலாமின் ஆட்டம் முடிந்து விட்டது-பவார்பதவி விலக வேண்டும்-லாலு
டெல்லி:குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆட்டம் முடிந்து விட்டது. மீண்டும் அவர் மைதானத்தில் விளையாட நினைக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார். கலாம் கெளவரமாக பதவி விலக வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
அப்துல் கலாம் மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும் என்று 3வது அணி வலியுறுத்தும் நேரத்தில், கலாமால் மீண்டும் வெல்ல முடியாது என்று மூன்று மூத்த அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில், மூன்றாவது அணியின் வலையில் கலாம் சிக்கி விடக் கூடாது. மீண்டும் போட்டியிடத் தயார் என்பது போல கலாம் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
அப்துல் கலாம் மீண்டும் போட்டியிட முடிவு செய்தால் அது அரசுக்கு எந்தவிதமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தாது என்றார்.
ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் கலாம் கெளரவமான முறையில் பதவி விலக வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீலின் வெற்றி உறுதியாகி விட்டது.
பிரதீபா பாட்டீலை அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆட்டத்திற்கு அந்தக் கட்சிகள் ஆடக் கூடாது. பிரதீபா பாட்டீல் காங்கிரஸின் வேட்பாளர் மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் கூட்டு வேட்பாளர் என்றார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், குடியரசுத் தலைவர் பதவி என்பது மிகவும் உயர்ந்த பதவி. எனவே தனது பெயரை பிறர் பயன்படுத்துவதற்கு கலாம் அனுமதிக்கக் கூடாது. 3வது அணியின் வலையில் கலாம் சிக்கிக் கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்.
கலாமின் ஆட்டம் முடிந்து விட்டது. மறுபடியும் விளையாட்டைத் தொடங்க அவர் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன் என்றார் பவார்.












Click it and Unblock the Notifications