அப்துல் கலாமுடன் மோதவில்லை-காங்.
டெல்லிகுடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அப்துல் கலாமுடன் காங்கிரஸ் கட்சி எந்த மோதலிலும் ஈடுபடவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை கடுமையாக விமர்சித்து நேற்று மத்திய அமைச்சர்கள் சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதில் முன்ஷி, கலாம் மீண்டும் போட்டியிடக் கூடாது என்று கூறியிருந்தார். பவாரோ, கலாம் ஆட்டம் முடிந்து விட்டது என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் எந்தவித மோதலிலும் ஈடுபடவில்லை என்று விளக்கியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இப்போதைக்கு குடியரசுத் தலைவர் கலாமுடன் காங்கிரஸ் எந்தவிதமான மோதலிலும் ஈடுபடவில்லை.
ஏற்கனவே பிரதீபா பாட்டீலை வேட்பாளராக அறிவித்து விட்டதால், தங்களை வேட்பாளராக அறிவிக்க இயலாத நிலையில் உள்ளதாக டாக்டர் கலாமிடம் காங்கிரஸ் கட்சி அறிவித்து விட்டது.
ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் அரசியலைப் புகுத்தி அசிங்கப்படுத்தி விட்டது 3வது அணி. இதன் மூலம் தேவையற்ற சர்ச்சையயும் அந்த அணி உருவாக்கி விட்டது. குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் மூன்றாவது அணி இவ்வாறு செயல்படுகிறது என்றார் ஜெயந்தி நடராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications