அயர்லாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா
பெல்பாஸ்ட்:
அயர்லாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளுடனான ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
![]() |
நேற்று பெல்பாஸ்ட் நகரில் இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கிடையே முதலாவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட், அயர்லாந்தை முதலில் பேட் செய்யும்படி பணித்தார்.
இந்திய அணியில், ஜாகிர்கான், டோணி ஆகியோர் விளையாடவில்லை. அவர்களுக்குப் பதில் திணேஷ் கார்த்திக், ரோஹித் வர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி, ரன் குவிக்க முடியாமல் திணறியது. 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இளம் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா, வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் இருவரும் ரன் எடுக்க விடாமல் எதிரணியை கட்டுப் படுத்தினர்.
அயர்லாந்து அணியின் ஓபிரையன் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.அவருக்கு இணையாக ஜான்சன் அதிரடியாக 44 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் ஸ்ரீசாந்த், சாவ்லா தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்திய அணி பேட்டிங்கை துவக்கும் வேளையில் மழை பெய்ததால் போட்டி தாமதமாக துவங்கியது. அதனால் இந்திய அணி 39 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கங்குலியும், டெண்டுல்கரம் இறங்கினர். அடித்து நொறுக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கர் 4 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார்.
ஆனால் கங்குலியும், கெளதம் காம்பீரும் இணைந்து அடித்து நொறுக்கத் தொடங்கினர். இருவரும் ஆட்டம் இழக்காமல் 162 ரன்கள் சேர்த்தனர். காம்பீர் 109 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 80 ரன்கள் எடுத்தார். கங்குலி 100 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 35 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து டக்வொர்த்-லூயிஸ் விதிப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்ட நாயகனாக கவுதம் காம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications