ஷெகாவத் நாளை மனு தாக்கல்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக, குடியரசுத் துணைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
![]() |
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடது சாரிகள் சார்பில் முன்னாள் ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஷெகாவத் சுயேச்சையாக களம் காண்கிறார். அவருக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆதரவையும் பாஜக கோரியுள்ளது.
பிரதீபா பாட்டீல் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஷெகாவத் நாளை வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். நாளை முற்பகல் 11.30 மணிக்கு ஷெகாவத் மனு தாக்கல் செய்வார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஓட்டுக் கணக்கைப் பார்த்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் நிலைமை மாறும். ஷெகாவத் அபார வெற்றி பெறுவார்.
ஷெகாவத்துக்கு ஆதரவு ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முன்வர வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதால் எந்த லாபமும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications