ஈழத் தமிழர்களுக்காக டர்பனில் பேரணி
டர்பன்:
இலங்கையில் நடந்து வரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நூற்றுக்கணக்கான தமிழர்களும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது.
தென் ஆப்பிரிக்க தமிழர் ஒத்துழைப்புக் குழு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரும் திரளான தமிழர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட இந்தப் பேரணி, இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வொர்த் நகரியத்தில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் முடிவடைந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உருவப் படம் ஏந்திய பதாகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்றனர். தமிழர்களை அழிக்கும் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உலக சமுதாயத்தைக் கோரி கோஷம் எழுப்பப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் எம்.பி. எம்.கே.ஈழவேந்தன் கூருகையில், தமிழர்களுக்கு தனி தாயகம் கோரி நாங்கள் போராடி வருகிறோம். தமிழர்களை பூண்டோடு அழிக்க இலங்கை அரசு முயலுகிறது, எனவேதான் தனித் தாயகம் கோருகிறோம்.
தென் ஆப்பிரிக்க அரசு இலங்கைத் தமிழர்களைக் காக்க குரல் கொடுக்க வேண்டும். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு தென் ஆப்பிரிக்க அரசு, இலங்கை அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
பேரணியின் இறுதியில், தென் ஆப்பிரிக்க மனித உரிமைக் கழக தலைவர் பேராசிரியர் கார்த்தி கோவேந்தர், துணை மேயர் லோகநாதன் நாயுடு ஆகியோரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications