கட்டாய ஹெல்மெட்: அரசுக்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை: கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தின் ஆறு மாநகரங்களிலும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்தது.. இர பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும்.
தமிழக அரசின் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ரவிராஜபாண்டியன் மற்றும் சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இன்னும் 2 வார காலத்திற்குள் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications