பரவி வரும் எலிக் காய்ச்சல்-2 பேர் பலி:ராமநாதபுரத்தில் பீதி
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் போன்ற வித்தியாசமான காய்ச்சலுக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
சிக்குன்குனியா, டெங்கு என உயிரைப் பறிக்கும் காய்ச்சல்களால் தமிழக மக்கள் சில மாதங்களுக்கு முன்பு பெரும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வித்தியாசமான புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கிடத்திருக்கை (காரைக்குடி அருகே உள்ளது) மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த புதிய வகை காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது.
இந்தக் காய்ச்சலுக்கு கிடத்திருக்கையைச் சேர்ந்த ராமபாண்டி, அதே கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாசடைந்த குடிநீரைக் குடித்ததால்தான் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது என்ன வகை காய்ச்சல் என்று அதிகாரிகள் விளக்க மறுத்து விட்டனர். அநேகமாக இது எலிக் காய்ச்சலாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சித் தலைவர் கிர்லோஷ் குமார் கூறுகையில் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. முதுகுளத்தூரில் தங்கியிருந்து இந்தக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications