குற்றாலத்தில் 28ம் தேதி சாரல் விழா
குற்றாலம்:குளு குளு குற்றாலத்தில் வருகிற 28ம் தேதி சாரல் விழா தொடங்கவிருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார்.
குற்றாலம் வந்த ஆட்சித் தலைவர் பிரகாஷ், மாவட்ட எஸ்.பி. செந்தாமைரக்கண்ணன் ஆகியோர் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை சுற்றிப் பார்த்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் ஆட்சித் தலைவர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், குற்றத்தால் இந்த ஆண்டுக்கான சாரல் விழா வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி வரை இது நடைபெறும்.
இந்த சாரல் விழாவின்போது பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கலைக்குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாரல் விழா மற்றும் குற்றால சீசனையொட்டி இங்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் பேசுகையில், விடுமுறை நாட்களில்தான் குற்றாலத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். எனவே விடுமுறை நாட்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
பெண் போலீஸாரும் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வெளிமாவட்டங்களிலிருந்து இங்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைத் தடுக்க வெளிமாவட்ட போலீஸாரும் இங்கு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
தற்போது உள்ள இரண்டு நடமாடும் காவல் போலீஸாருடன் கூடுதலாக 2 படைகள் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications