முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு நிச்சயம்இட ஒதுக்கீடு உண்டு-கருணாநிதி உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கத் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்ள்ளும் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. எனவே இந்த விஷயத்தை அரசியலாக்க முயற்சிக்கும் சிலரின் சூழ்ச்சிக்கு சிறுபான்மையினர் பலிகடாவாகி விடாமல் இருக்க வேண்டும்.

ஆந்திர அரசு முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பாக அவரச சட்டம் கொண்டு வரவும் அது ஆலோசித்து வருகிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக சட்டப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக தி.க.தலைவர் கி.வீரமணி சிறப்பான, சரியான கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அவசரப்பட்டு எந்த சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்து, அந்த சட்டத் திருத்தத்திற்கு கோர்ட்டுகள் மூலம் தடையுத்தரவு பெறப்பட்டு விடும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே இதை மனதில் கொண்டு, இதுதொடர்பான சட்டப் பிரச்சினைகளை ஆராய குழு ஒன்றை நான் அமைத்துள்ளேன். இதனால்தான் தனி இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி இந்த விவகாரத்தை திமுக அரசு கைவிட்டு விட்டதாக யாரும் நினைத்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+