காவிரி: பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.
கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அம்மாநில துணை முதல்வர் எடியூரப்பா தலையிட்டு அணையை மூட உத்தரவிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தமிழகத்திற்கு கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசை வற்புறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு, இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பினேன். அவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து 300 மாணவர் இடங்கள் தொடர்பாக சாதகமான பதிலை பெற்று வந்துள்ளார்.
எனவே 300 மாணவர் இடங்கள் தடைபடும் என்ற ஜெயலலிதாவின் கனவு பலிக்காது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications