பெங்களூர் சென்றார் கருணாநிதி
சென்னை:முதல்வர் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாளுடன் பெங்களூர் சென்றுள்ளார். 3 நாட்களுக்கு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் கருணாநிதி. அவருடன் மனைவி தயாளு அம்மாள், குடும்ப டாக்டர் கோபால் உள்ளிட்டோர் சென்றனர்.
![]() |
பெங்களூரில் உள்ள மகள் செல்வி வீட்டில் கருணாநிதியும், தயாளு அம்மாளும் 3 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளனர். 10ம் தேதி மாலை பெங்களூரிலிருந்து கருணாநிதி சென்னை திரும்புவார்.
இதேபோல அமைச்சர் துரைமுருகனும் பெங்களூர் சென்றுள்ளார். இவரது மகள் வீடும் பெங்களூரில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
13 மாதங்களில் ரூ. 9710 கோடி முதலீடுகள்:
முன்னதாக சென்னை அருகே உள்ள மறைமலை நகரில், டஃபே நிறுவனத்தின் 3வது தொழிற்சாலையை முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து 13 மாதங்களில் ரூ. 9710 கோடி மதிப்பிலான முதலீடுகளை கொண்டு வந்துள்ளது.
கடந்த 2001-06ம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த கால கட்டத்தில் மொத்தமே ரூ. 2220 கோடி அளவிலான முதலீடுகள்தான் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 13 மாதங்களிலேயே திமுக அரசு இவ்வளவு பெரிய முதலீட்டைக் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசின் செயல்பாடுகள், தொழில் வளர்ச்சியில் காட்டும் அக்கறை, அணுசரணை ஆகியவற்றையே இது காட்டுகிறது.
நகரங்களிலும், புற நகரங்களிலும் மட்டும் தொழில் வளர்ச்சி இருந்தால் போதாது, கிராமங்களுக்கும் அது பரவ வேண்டும் என மக்கள் தற்போது நினைக்கிறார்கள். அந்த லட்சியத்தின் அடிப்படையில்தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications