கிளாஸ்கோ தாக்குதல்: ஈராக் டாக்டர் கோர்ட்டில் ஆஜர்
லண்டன்:கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த கார் குண்டுத் தாக்குதல், லண்டனில் கார் குண்டுகள் வைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஈராக்கைச் சேர்ந்த டாக்டர் பிலால் அப்துல்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தோல்வியில் முடிந்த இந்த இரு தீவிரவாதச் செயல்கள் தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த முகம்மது ஹனீப், கபீல் அகமது, ஷபீல் அகமது உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹனீப் மட்டும் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் முதல் நபராக பிலால் அப்துல்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெரும் நாசச் செயலுக்கான சதித் திட்டத்தைத் தீட்டியதாக பிலால் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நேற்று அவர் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம் பெயரும், பிறந்த தேதியும் கேட்கப்பட்டது. அவற்றுக்கு பிலால் அப்துல்லா பதிலளித்தார்.
பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிமன்ற ஊழியர் விவரித்தார். அதன் பிறகு அவரை ஜூலை 27ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறும், அன்றைய தினம் மீண்டும் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்துல்லா சார்பில் ஜாமீன் கோரி மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. பிலால் அப்துல்லா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம். கபீல் அகமது (எரிந்த ஜீப்பை ஓட்டி வந்தவர்), அவரது தம்பி ஷபீல் அகமது, டாக்டர் முகம்மது ஆஷா, அவரது மனைவி மார்வா ஆஷா, முகம்மது ஹனீப் மற்றும் இரு பயிற்சி டாக்டர்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications