சந்திரசேகருக்கு கருணாநிதி புகழாரம்
சென்னை:கடைசி வரை மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், சமுதாயத் தொண்டாற்றுவதிலும், மதச்சார்பின்மையை உறுதியாக கடைப்பிடித்தும் வாழ்ந்து மறைந்தவர் சந்திரசேகர் என்று முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இளமை முதலே சமுதாயத் தொண்டில் ஈடுபட்டவர் சந்திரசேகர்.
மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். கன்னியாகுமரி முதல் டெல்லியில் அண்ணல் காந்தி சமாதி வரை நீண்ட நெடும் பாதயாத்திரை மேற்கொண்டவர்.
சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டு இறுதி வரை மதச்சார்பற்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடித்தவர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
சந்திரசேகர் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தனித்தன்மை வாய்ந்தவர் சந்திரசேகர். சிறந்த அரசியல்வாதியாக மட்டுமின்றி, நாடாளுமன்றவாதியாகவும் தனி முத்திரை பதித்தவர். கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். கொண்ட கொள்கைகளில் உறுதியானவர். வார்த்தை ஜாலம் செய்யாதவர், தேசியவாதி. அவரது மரணம், இந்திய அரசியலுக்கு பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications