புலிகள் நிலைகள் மீது ராணுவம், கடற்படைகடும் தாக்கு-15 பேர் பலி
கொழும்பு:விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கை ராணுவமும், கடற்படையும் நடத்திய கடும் தாக்குதலில் 15 விடுதலைப் புலிகள் இறந்ததாக கூறப்படுகிறது.
இலங்கையின் கிழக்கில் உள்ள தொப்பிகலா என்ற புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயற்சித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இங்கு சண்டை தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில்நேற்று இப்பகுதியில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட புலிகள் சிலரின் உடல்களின் சிதறிய பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதே பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த மோதலில், 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திரிகோணமலை மாவட்டத்தில் நேற்று இரவு கடல் புலிகள் பிரிவினருக்கும், கடற்படை வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது.
மொத்தம் 15 படகுகளில் கடல் புலிகள் வந்து கடற்படையின் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். அதேபோல கல்லாறு பகுதியிலும் கடல் புலிகள் திடீர் தாக்குதலில் குதித்தனர்.
இந்த இரு முனைத் தாக்குதலால் கடற்படை வீரர்கள் திணறினர். இதையடுத்து அவர்களுக்கு உதவியாக ராணுவம் வரவழைக்கப்பட்டது.
கடுமையாக நடந்த இந்த சண்டையின் இறுதியில் விடுதலைப் புலிகள் நாயரு என்ற பகுதிக்குள் பின்வாங்கிச் சென்று விட்டதாக பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கடற்படையினர் அத்துமீறி வர முயன்றதால்தான் தாங்கள் தாக்க நேர்ந்ததாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை மூன்று மணி நேரம் நடந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications