காஞ்சிபுரத்தில் பிரபல ரௌடி வெட்டிக் கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல கொலை, குற்றங்களில் சம்பந்தப்பட்ட ரௌடி, மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
காஞ்சிபுரம் மன்னிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (34). பல கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்.
இந்த நிலையில் ஜெயராமன், மன்னிவாக்கம் பள்ளிக்கு அருகில் சென்றுக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரை மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. அமல்ராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஜெயராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சில மாதங்களுக்கு முன் இதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் சகோதரன் ஜெயசீலன் என்கிற ஷீலா என்பவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றது. இதில் ஜெயராமனுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
எனவே, ஷீலாவுக்குத் தொடர்புடையவர்கள்தான் ஜெயராமனை பழிக்குப் பழியாக கொன்றிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications