சேது பேச்சு: உமாபாரதி மீது வழக்குப் பதிவு!
திருச்சி:
பாரதிய ஜன சக்தித் தலைவரும், முன்னாள் மத்தியப் பிரதேச மாநில முதல்வருமான உமாபாரதி மீது திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உமா பாரதி கலந்து கொண்டார். அதேபோல திருச்சியில் கண்டன பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.
ராமேஸ்வரத்தில் அவர் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் கடுமையாக பேசினார். மேலும் சேது சமுத்திரத் திட்ட ஊழியர்களையும் எச்சரிக்கும் வகையிலும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சேது சமுத்திரத் திட்ட ஊழியர்களை மிரட்டும் வகையில் பேசியதாக உமாபாரதி மீது ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராமர் பாலத்தைக் காக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும், தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று பேசியிருந்தார் உமா பாரதி.
இதையடுத்து வன்முறையைத் தூண்டும் விதமாக உமாபாரதி பேசியதாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கொலை மிரட்டல், அமைதிக்குப் பங்கம் வகிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் உமாபாரதி மீது இரு வழக்குகள் பதிவு செயய்யப்பட்டன.
தன் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ள பின்னணியில், இன்று அதிகாலை உமாபாரதி டெல்லி கிளம்பிச் சென்றார்.
விரைவில் இந்தப் புகார்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் உமா பாரதி மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications