ரூ. 10,000 கோடி முறைகேடு:தயாநிதி மீது பரபரப்புப் புகார்
டெல்லி:பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மொபைல் போன் கருவிகளை வாங்க டெண்டர் விட்டதில் ரூ. 10,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா உத்தரவிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய டெண்டரை ரத்து செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, கடந்த மார்ச் மாதம் 4.55 கோடி புதிய மொபைல் போன் இணைப்புக்கள் வழங்குவதற்குத் தேவையான ஹேண்ட்செட்களை வாங்க தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டெண்டர் விடப்பட்டது. இதில் நோக்கியா, மோட்டோரோலா, எரிக்சன், சீமன்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் எரிக்சன் மற்றும் நோக்கியா நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைத்தது.
இதை எதிர்த்து மோட்டோரோலா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், மிகக் குறைந்த விலைக்கு டெண்டர் கேட்டும் கூட அதைத் தங்களுக்குத் தராமல் அதிக விலைக்கு கோட் செய்த நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது தவறு என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ராஜா புதிய அமைச்சர் ஆனார்.
இதே போன்ற கருவிகளை வாங்க மும்பையின் எம்.டி.என்.எல். நிறுவனம் டெண்டர் விட்டபோது, ஒரு கருவிக்கு ரூ. 2,845 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் தயாநிதி மாறன் தலைமையிலான அமைச்சகம் அந்த டெண்டர் விட்டபோது ஒரு கருவிக்கு ரூ. 4,949 என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த விலைக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டிருந்தால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ. 10,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று ராஜா அமைச்சரான பிறகு தெரிய வந்ததாம். இதையடுத்து இந்த டெண்டரை நிறுத்த ராஜா உத்தரவிட்டார்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும், புதிய ெடண்டர் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications