பழம் தந்த சிறுவனை மிதித்து கொன்ற யானை!
பெங்களூரு:வாழைப்பழம் கொடுக்க வந்த சிறுவனை கோவில் யானை மிதித்து கொன்றது.
பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மஞ்சு. இவர் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் எடியூரில் உள்ள சித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு சென்றார்.
சாமி கும்பிட்ட பின் கோவில் வளாகத்தில் குடும்பத்தோடு அமர்ந்திருந்தனர். அப்போது மகன்கள் இருவரும் கோவிலில் இருந்த யானைக்கு பழம் தர விரும்பினர்.
![]() |
இதையடுத்து அவர்களிடம் மஞ்சு வாழைப் பழத்தை கொடுத்தனுப்பினார்.
மஞ்சுவின் குழந்தைகள் சச்சின், சஞ்சய் இருவரும் யானைக்கு பழம் கொடுத்தனர். இதில் சச்சின் பழத்தை கொடுத்த போது யானை அவனை எட்டி உதைத்தது.
உடனிருந்த சஞ்சய் பயந்து ஓடி வந்து இதை தந்தையிடம் தெரிவித்தான். உடனே மஞ்சு பதறியடித்து அங்கு சென்று பார்த்த போது யானை அதற்குள் சச்சினை மிதித்து கொன்றுவிட்டது.
அப்போது யானை பாகன் அங்கில்லை. இதனால் அங்கிருந்த பக்தர்கள் கோபமடைந்து கோவில் வளாகத்தை சூறையாடினர்.
கோயில் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வராததை கண்டித்து, குழந்தையை பறிகொடுத்த பெற்றோர், பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
குழந்தையின் சவத்தை எடுக்காமல் கோவில் முன்பு வைத்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தும்கூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications