4 தொகுதிகளில் போட்டி: ஜெ. மீதுசிதம்பரம் கோர்ட்டில் வழக்குப் பதிவு!!
சிதம்பரம்:நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி இன்று சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது, ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து திமுக எம்.பி. செ.குப்புசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தேர்தல் அதிகாரிகள் வழக்கு தொடரும் பணியை தொடங்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று புவனகிரி தேர்தல் அதிகாரி செல்வமணி சார்பில், சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிபதி வசந்தியிடம் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி வசந்தி, இந்த வழக்கை இங்கு தொடர முடியாது. கடலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலோ அல்லது பரங்கிப்பேட்டை நீதிமன்றத்திலோதன் தொடர முடியும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இன்று அல்லது நாளைக்குள் இந்த இரு நீதிமன்றங்களில் ஒன்றில் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications