மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 62 ஆகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. 1990ம் ஆண்டு இது 60 வயதாக மாற்றப்பட்டது. அப்போது இந்த வயது உயர்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய அரசு இதை செயல்படுத்தியது.
இந் நிலையில் இப்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருவதால் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாக ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டாலும், ஓய்வு பெறுபவர்களுக்கு பணம் வழங்குவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications