சென்னை ஹிக்கின் பாதம்ஸில் கொள்ளை:செக்யூரிட்டிகள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடையில் ரூ. 2.7 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது ஹிக்கின் பாதம்ஸ். இது 150 வருட பழமையான நிறுவனமாகும்.

இதை வெங்கடேசன் ராமநாதன் என்பவர் நிர்வகித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இரவு கடையை பூட்டி விட்டு மறுநாள் திறந்தபோது கடையின் உள்ளே புத்தகங்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பணம் வைக்கப்படும் பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.அதிலிருந்த ரூ. 2.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் ராமநாதன் சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக நள்ளிரவு வரை கடையில் காவலுக்கு இருந்த மூன்று செக்யூரிட்டிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், போலீஸார் விசாரணையில் நாங்கள் திருடவில்லை என்று அந்த பாதுகாவலர்கள் தெரிவித்தனர். ஆனால், அன்றைய தினம் இரவு போதையில் இருந்தோம் என்று கூறினர்.

மேலும் பீரோவில் இருந்த கைரேகையோடு இவர்களது கைரேகையும் ஒத்துப் போகாததால் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து அதிகாலையில் காவலுக்கு இருந்த வாணியம்பாடியைச் சேர்ந்த செக்யூரிட்டிகளான ஜாவித் மற்றும் அப்துல் ஹமீது ஆகியோரை போலீசார் விசாரித்தனர். அவர்களது கைரேகையுடன் பீரோவில் இருந்த ரேகைகளும் ஒத்துப் போயின.

போலீஸார் முறைப்படி கவனித்ததில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர். இவர்களிடம் இருந்து ரூ.2.6 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+