அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்வெடித்துச் சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து பெரும் தீவிபத்து ஏற்பட்டதால் நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் பதட்டமடைந்து ஓடினர்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையின் பின் பக்கம் உள்ள கிட்டங்கியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

நேற்று மாலை இங்கு ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் தீப்பிடித்துச் சிதறியது. இதையடுத்து ஆறு ஆக்சிஜன் சிலிண்டர்களும் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகள் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே ஓடினர்.

உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதால் அனைத்து சிலிண்டர்களும் வெடித்துச் சிதறி பெரும் ஆபத்து ஏற்படவிருந்தது தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏதும் இல்லை. சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விரைந்து வந்து பார்வையிட்டார்.

மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளைப் பார்க்க வந்தவர்களும் சமயோஜிதமாக செயல்பட்டு தீயை அணைக்க உதவியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+