தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு:19 பேருக்கு ஜாமீன் மறுப்பு!
மதுரை:மதுரையில் தினகரன் பத்திரிக்கை தாக்கப்பட்ட வழக்கில் கைதான 19 பேருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
அழகிரி-ஸ்டாலின் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பையடுத்து ஒத்தக்கடை அருகே உள்ள தினகரன்-சன் டிவி அலுவலகத்தை அழகிரியின் ஆதரவாளர்கள் தாக்கி தீ வைத்தனர். இதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அட்டாக் பாண்டி எனும் ரெளடி உட்பட 19 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மதுரை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபால் ஆஜராகி, இந்த வழக்கில் தினகரன் அலுவலக ஊழியர்கள் 3 பேர் இறந்தது தொடர்பாக இன்னும் சில குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியுள்ளது. அதனால் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுத்தால், அவர்கள் சாட்சியங்களை அழித்து விடுவார்கள், மேல் விசாரணையும் பாதிக்கப்படும் என்றார்.
இதையடுத்து நீதிபதி கருப்பையா 19 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications