சத்துணவில் இனிமேல் 3 முட்டை!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:காமராசர் பிறந்த நாள் முதல் சத்துணவில் வாரத்துக்கு இனிமேல் 3 முட்டைகள் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தற்போது பள்ளிகளில் சத்துணவில் வாரத்திற்கு 2 முட்டைகள், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் வழங்கப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த முட்டை திட்டம் அமலில் உள்ளது.

இதை வாரத்திற்கு 3 ஆக அதிகரித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத் திட்டம் காமராசர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

முட்டை திட்டத்தால் நகர்புறத்தில் சுமார் 4 லட்சம் மாணவ-மாணவிகளும், கிராமப்புறத்தில் 55 லட்சம் பேரும் அங்கன்வாடிகளில் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகளும் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+