கோவில் வாட்ச்மேன் கொலை - ரூ. 2000 திருட்டு
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே கோவில் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். கோவில் உண்டியலை உடைத்த கொலையாளிகள் அதில் இருந்த ரூ. 2,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் காவலாளியாக பாளையம் (55) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இங்கு வந்த ஒரு மர்ம கும்பல் பாளையத்தின் கை, கால்களை கட்டி பின்னர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர்.
பின்னர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பக்தர்களின் காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றனர். அந்த உண்டியலில் 2000 ரூபாய் பணம் இருந்திருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications