காந்தப் படுக்கை: ரூ. 350 கோடி மோசடி!- ஆந்திர வாலிபர் கைது
சென்னை:
போலியான காந்தப் படுக்கை, மெத்தைகளை விற்று தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிராவில் ரூ. 350 கோடி அளவுக்கு மோசடி செய்த வாலிபரை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் இன்று வளைத்துப் பிடித்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் ராஜ் வசந்த் பண்டிட் (26). இவர் காந்தப் படுக்கை என்ற பெயரில் போலியான காந்தப் படுக்கை, மெத்தை உள்ளிட்டவற்றை தயாரித்து விற்று வந்துள்ளார்.
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் முறை மூலம் இந்த போலி காந்தப் படுக்கைகளை ஆந்திரா, தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் விற்றுள்ளார். இந்த வகையில் ரூ. 350 கோடி அளவுக்கு பணத்தையும் வாரிச் சுருட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராஜ் வசந்த் பண்டிட் மீது ஆந்திர மாநிலம் நல்கொண்டாவில் மட்டும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஹைதராபாத், மும்பை மற்றும் தமிழகத்திலும் இவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதையடுத்து தலைமறைவாகி விட்டார் பண்டிட். இந்தியாவிலிருந்து தப்பி துபாய் போய் விட்டார். அவர் இந்தியா திரும்பினால் பிடிப்பதற்கு ஆந்திர போலீஸார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை துபாயிலிருந்து சென்னைக்குத் திரும்பினார் பண்டிட். எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த அவரை விமான நிலையத்திலேயே போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
பண்டிட் சிக்கியது குறித்து ஆந்திர போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து நல்கொண்டா சிஐடி இன்ஸ்பெக்டர் ரவீந்திர ரெட்டி தலைமையில் போலீஸ் படை சென்னைக்கு வந்தது. விமான நிலையத்தில் வைத்து பண்டிட்டை ஆந்திர போலீஸாரிடம் சென்னை போலீஸார் ஒப்படைத்தனர். பின்னர் அவர் ஆந்திரா கொண்டு செல்லப்பட்டார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications