பணம் கேட்டு மணப்பாறை டாக்டரைமிரட்டுவதாக 3 பேர் மீது புகார்!
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த ஒரு டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்த பெண் இறந்ததால் அந்த டாக்டரிடம் ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்ததால் மணப்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன், காந்திமதி தம்பதியின் 15 வயது மகன், கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சர்ச்சை தற்போதுதான் அடங்கியுள்ள நிலையில் மணப்பாறையைச் சேர்ந்த இன்னொரு டாக்டர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மணப்பாறையைச் சேர்ந்தவர் டாக்டர் சேகர். இந்திய மருத்துவ சங்கத்தின் மணப்பாறை பிரிவு பொருளாளராக இருக்கிறார். இவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
மணப்பாறை ஜீவா நகரைச் சேர்ந்த சிவலிங்கம் மனைவி வள்ளிக்கண்ணு (38). இவரது மகள் மாலதி(18). இவர் பிசியோதெரபி உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் சேகருக்குச் சொந்தமான சித்ரா கிளினிக்கில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த டாக்டர் சேகர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியதால் அன்று மாலை அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷனை டாக்டர் வெங்கட பிரசாத் என்பவர் செய்தார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் மாலதிக்கு உடல் நலம் சரியாகவில்லை. இதையடுத்து திருச்சி ஜி.வி.என். மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஏப்ரல் 2ம் தேதி இறந்தார் மாலதி.
டாக்டர் சேகரின் மருத்துவமனையில் தவறான முறையில் அறுவைச் சிகிச்சை செய்ததால்தான் மாலதி இறந்து விட்டதாக கூறி அழுதுள்ளார் வள்ளிக்கண்ணு. இதையடுத்து அவரது தம்பி, ஜெயலட்சுமி ஆகியோர் டாக்டர் சேகரை அணுகி ரூ. 1 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினை செய்வோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் டாக்டர் சேகர். போலீஸார் டாக்டர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் வள்ளிக்கண்ணு, அவரது தம்பி, ஜெயலட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications