ரூ.9.5 லட்சம் மோசடி - பெண் போதகர் கைது!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்திற்கு வந்தவர்களிடம் பணம் மற்றும் நகையை இரவல் வாங்கி திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்த பெண் போதகர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில் எம்பரர் தெருவை சேர்ந்தவர் பொம்பை மேரி (44). கிறிஸ்தவ மத போதகராக உள்ள இவர் அப்பகுதியில் அடிக்கடி ஜெபக் கூட்டம் நடத்தி வந்தார்.

இவரது கூட்டத்திற்கு ஏராளமான பெண்கள் வருவர். அப்படி வருகிறவர்களிடம் நகைகளை இரவலமாக வாங்கிக் கொள்வாராம். அதேபோல கடனாக பணமும் வாங்கியுள்ளார்.

இப்படி கிட்டத்தட்ட ரூ. 9.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை அவர் வாங்கியுள்ளார். ஆனால் அவற்றைத் திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டார்.

பணம், நகைகளை திருப்பிக் கேட்டவர்களை தனது மகன்கள் மற்றும் ஆட்களை வைத்து மிரட்டியுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி காவல் நிலையத்தில் மேரி மீது புகார் கூறப்பட்டது.

இதையடுத்து மேரி மற்றும் அவரது மகன்கள் லாயிட், ஆம்சன், உறவினர் ராஜா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+