கள்ள காதல் மந்திரவாதி கொலை: 4 பேர் கைது
சென்னை:சென்னையில் மந்திரவாதி ஒருவர் கொட்டும் மழையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் சகோதரர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியக் குற்றவாளிகள் இருவர் வெளிநாட்டுக்குத் தப்பி விட்டனர்.
சென்னை, கொருக்குப்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் காதர்பா பா (40). பில்லி, சூனியம் எடுப்பது, வைப்பது, மாந்த்ரீகம் என பல வித்தைகள் தெரிந்தவர். வசியக் கலையிலும் வல்லவராம்.
தனியாக அலுவலகம் வைத்து நடத்தும் அளவுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவரிடம் ஒரு பிரச்சினை குறித்து உதவி கேட்க வந்தவர்தான் ஷர்மிளா.
வந்தவரின் அழகில் மயங்கிய ஷேக் பரீத், ஷ்ர்மிளாவை தனது வலையில் வீழ்த்தினார். ஷர்மிளாவின் கணவர் நைனார் முகம்மது லண்டனில் வேலை பார்த்து வருகிறார். எப்போதாவதுதான் வருவாராம்.
இதனால் ஷேக் பரீத்துடன் உல்லாசமாக இருந்துள்ளார் ஷர்மிளா.
நைனார் முகம்மதுக்கு இந்த விவகாரம் தெரிய வந்து அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், தனது குழந்தையை கணவரின் அம்மா வீட்டில் விட்டு விட்டு பரீத்துடன் நிரந்தரமாக குடியேறி விட்டார் ஷர்மிளா.
ஷர்மிளாவின் கள்ளக் காதல் விவகாரத்தால், அவரது சகோததரர்களும் கூட கொந்தளித்திருந்தனர். இந்த நிலையில்தான் ஷேக் பரீத் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஷர்மிளாவின் சகோதரர்களும், நைனார் முகம்மதுவின் அண்ணன் ரகமதுல்லாவும் சேர்ந்துதான் இந்தக் கொலையை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஷர்மிளாவின் சகோதரர்கள் இக்பால், காதர், கவுர், ரஷீத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரகமதுல்லாவும், அவரது நண்பர் முருகன் என்பவரும் பெங்களூரில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்தனர். ஆனால் இருவரும் வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக தெரிய வந்தது. அவர்கள் வியாபார விஷயம் தொடர்பாக அவ்வப்போது சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்குப் போய் வருவார்களாம்.
இவர்கள் இருவர் தவிர மேலும் 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்தக் கொலையில் நைனார் முகம்மதுவுக்குத் தொடர்பு இல்லை என்று போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications