சென்னை கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தீ
சென்னை:சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தன.
சேத்துப்பட்டு வெக்ளி கோலன் சாலையில் உள்ள சைதன்யா பல அடுக்கு மாடி வளாகத்தில் சாப்ட்வேர் நிறுவனங்கள், ரயில்வே உணவுப் பிரிவின் அலுவலகம் உள்பட பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த கட்டடத்தின் 11வது மாடியில் அடாப் இன்போடெக் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு இன்று காலை 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 4 ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தனர்.
தீ பிடித்ததும் இவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் மின்சாரம் தடை பட்டதால் தானியங்கி கண்ணாடி கதவுகள் மூடிக் கொண்டன. அவை திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு நால்வரும் தப்பி வெளியேறினர்.
தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், பொருட்கள் சேதமடைந்துவிட்டன.












Click it and Unblock the Notifications